பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்..!!

நாட்டில் அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது குறித்து சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பல்வேறு அரசு கழக அதிகாரிகளும் லஞ்சம் பெறுவதில் வருவாய் பத்திரப் பதிவு அதிகாரிகளுடம் போட்டி போடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளதாவது :

பல்வேறு அரசு கழக அதிகாரிகளும் லஞ்சம் பெறுவதில் வருவாய் பத்திரப் பதிவு அதிகாரிகளுடம் போட்டி போடுகின்றனர்.

ஊழல் ஒழிப்புப் பிரிவு விழிப்புடன் இருந்தால் அதிகாரிகளின் சொத்துகள் உலகிற்குத் தெரியவரும் எனவும் தமிழகத்தில் பதிவுத் துறையில் இருந்துதான் பஞ்சம் தொடங்குவதாகவும் பத்திரப் பதிவுத் துறையில் மேஜைக்குக் கீழ்தான் வேலைகள் தொடங்குவதாகவும் கூறியுள்ளது. 

இதற்கு முன் உயர் நிதிமன்ற மதுரை கிளை, விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ., 40-ஐ அரசு அதிகாரிகள் பெறுவதாக எழுந்த புகாரில், அரசு அதிகாரிகள் தங்களின் ஊதியத்தைத் தாண்டி மக்களிடன் லஞ்சம் பெறுவது என்பது பிச்சை எடுப்பதற்குச் சமம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே