காற்றில் வேகமாக பரவும் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..!!

காற்றில் வேகமாகப் பரவும் ஹைபிரிட் வகை கரோனா வைரஸ் வியநாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வெவ்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. ஏற்கனவே இந்திய, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தற்போது வியட்நாமில் காற்றில் வேகமாகப் பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக இணைய வழி கூட்டத்தில் அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளது.

வியட்நாமில் 7 வகையான கரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வகையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் நுயேன் தன் லாங், “தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்று, இந்தியா மற்றும் பிரிட்டன் வகையின் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தது. இதற்கு மரபணுவை ஆய்வு செய்தபோது பிறவகை வைரஸை காட்டிலும் வேகமாகப் பரவுவது தெரியவந்துள்ளது. வியட்நாமில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை வைரஸ் தொற்றே பாதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே