கொரோனா 2ஆவது அலையால் இந்தியாவில் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலாகவே கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல முன்கள பணியாளர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சியில் மருத்துவர்களே பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தும் வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் முதல் அலை பரவலின்போது மொத்தமாக 736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய இரண்டாவது அலை பரவலால் இதுவர 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே