தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மே 24 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில் அதனை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மருத்துவ வல்லுநர் குழுவினரை தொடர்ந்து சட்டமன்றக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவுடனும் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், மே மாதம் இறுதி வாரத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளதால் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற மக்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே