வீடியோ : பீகாரில் தேசிய கீதம் தெரியாமல் திணறிய பாஜக கல்வி அமைச்சர்..!!

தேசிய கீதம் தெரியாமல், தப்பு தப்பாய் பாடி, திணறி விழித்துள்ளார் ஒரு பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.. அதுவும் கல்வி அமைச்சராக இருந்தவர்.. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.. இதையடுத்து நிதிஷ்குமார் மறுபடியும் அங்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அவருடைய அமைச்சரவையில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரியை நியமித்திருந்தனர்.

மேவாலால் சவுத்ரி மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பி வந்தன.

இந்நிலையில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதில், நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது..

உடனே அனைவருமே தேசிய கீதம் பாட தொடங்குகிறார்கள்.. சவுத்ரியும் பாட ஆரம்பிக்கிறார்..

ஆனால், அவருக்கு அடுத்தடுத்த வரிகள் தெரியவில்லை.. அதனால், வார்த்தைகளை மென்று மென்று விழுங்கினார்.

அடுத்த வரிகள் தெரியாமல் திணறியும் விழிக்கிறார். ஆனால், அந்த வீடியோவில் மற்ற குழந்தைகள் எல்லாரும் தேசிய கீதம் பாடுகிறார்கள்..

இறுதியில் கடைசி வரியை இணைத்து தேசிய கீதத்தை முடிக்கிறார்… “பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “வந்தே” என்றும் சொல்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், உங்கள் மனசாட்சியை எங்கே மூழ்கடித்தீர்கள்? என்று நிதிஷூக்கு கேள்வி எழுப்பியது..

அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூச்சுக்கு முன்னூறு தடவை தேச பக்தியை பற்றி பேசிவரும் பாஜகவில் இப்படி ஒரு பிரமுகரா? அதுவும் கல்வி அமைச்சருக்கு தேசிய கீதம் தெரியாமல் இருக்கலாமா? என்ற முணுமுணுப்புகளும் எழுந்து வந்தன.

இந்நிலையில், ஏற்கனவே பல புகார்கள் சவுத்ரி மேல் அடுத்தடுத்த வந்தநிலையில், இப்போது தேசிய கீதம் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பிவிட்டதால், மேவலால் சவுத்ரி தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே