மத்திய அரசு ஊழியர்களுக்கு 2019- 20ம் ஆண்டிற்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3,737 கோடி ரூபாய் அளவிற்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த போனஸ் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என்றும், விஜயதசமிக்கு முன்னதாக, ஊழியர்களின் வங்கிக்கணக்கில் போனஸ் தொகை செலுத்தப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே