சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட அசுரன், சூரரைப் போற்று தேர்வு..!!

கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக உலக திரைக்கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் ஆகியப் படங்களும், மலையாளத்தில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு உடன் தன்ஹாஜி, தி டிசிபல், ஈப் அலே ஓ, ஹராமி, ஜஸ்ட் லைக் தாட், ட்ரீ அண்டர் தி சன் ஆகியப் படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.

முன்னதாக, அசுரன் திரைப்படம் கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியிருந்தததும், ஆஸ்கார் விருது தேர்வுக்கு ஜல்லிக்கட்டு படம் தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே