விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது. இப்படத்தை குறிப்பிட்ட தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு, கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது என இப்படத்தின் இயக்குநர் விருமாண்டி முதலில் பேட்டியளித்தார்.

திரையரங்கில் மக்கள் ரசிப்பதற்காகத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே முதலில் திரையரங்கில் தான் படம் வெளியாகும்.

இரு நாள் படப்பிடிப்பு இன்னும் மீதமுள்ளது. டப்பிங், ரெக்கார்டிங் பணிகளும் மீதமுள்ளன.

டீசரை வெளியிட்டதற்குக் காரணம், படம் முடியும் தறுவாயில் உள்ளது என்கிற தகவலை வெளியிடுவதற்காகத்தான் என்று கடந்த ஜூன் மாதம் பேட்டியளித்தார்.

இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகவுள்ளது. இப்படத்தை குறிப்பிட்ட தேதி, நேரத்தைக் குறிப்பிட்டு, கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே