வேலூர் : கோழி பண்ணையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7000 கோழி குஞ்சுகள் எரிந்து உயிரிழந்தன…

வேலூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோழி பண்ணையில் இருந்த கோழி குஞ்சிகள் உயிரிழந்தன.

வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் சொந்தமான கோழி பண்ணையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது.

தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் சுமார் 7,000 கோழி குஞ்சிகளும் எரிந்து நாசமாகின.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே