வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்

கரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி நுழைவுப் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன .

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் , ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது .

பிரம்மாண்ட கட்டிடக்கலை அம்சத்துடன் விளங்கும் இந்த பேராலயத்திற்கு , இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலிருந்தும் திருவிழா காலங்களில் பொதுமக்கள் வருவார்கள் .

கரோனா ஊரடங்கால் சிலமாதங்களாகவே பேராலயம் மட்டுமின்றி வேளாங்கண்ணியே வெறிச்சோடியது .

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பேராலய ஆண்டுத்திருவிழா 29- ம் தேதி துவங்கி 9- ம் தேதி முடிவடைவது வழக்கம் , உலகம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்வார்கள் .

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று 29- ம் தேதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .

அடுத்த மாதம் 8- ம் தேதி வரை நடக்கவிருக்கிறது . ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வழக்கம்போல் திருவிழா நடைபெறும் என ஆலய நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது .

இதையடுத்து திருவிழாவில் பக்தர்கள் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் . 

வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளர்கள் , ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தினர் .

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது , ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . பேராலய கொடியேற்றத்திற்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மூலம் நோய்த்தொற்று பரவலாம் எனவே வெளியிலிருந்து வந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் .

அவ்வாறு வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் .

விடுதிகளில் யாரையும் அனுமதிக்கக் கூடாது , பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக வேளாங்கண்ணிக்கு வருவதற்கான 8 நுழைவுப் பாதைகளில் ஆறுபாதைகளை நேற்று முதல் அடைக்கப்பட்டுவிட்டன .

அதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது .

மீதமுள்ள இரண்டு பாதைகள் வழியாக உள்ளூர்வாசிகள் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

உள்ளூர்வாசிகள் வெளியே சென்றுவர குடும்ப அட்டை ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும். 

இந்த இரண்டு வழித்தடங்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர் .

இதற்கிடையில் , ” கொடியேற்றத்தை முன்னிட்டு வெளியிலிருந்து வந்து தங்குபவர்களுக்கு வீடுகளோ , விடுதிகளில் ரூம்களோ கொடுக்ககூடாது . அப்படி வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கியிருப்பது தெரியவந்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் , சம்பந்தப்பட்ட விடுதிக்கும் வீட்டுக்கும் சீல் வைக்கப்படும் ,” என்று கூறியுள்ளார் மாவட்ட எஸ் . பி .

கொடியேற்றம்நடப்பதுஉறுதி , பாதிரியார்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்து கொண்டு கொடியேற்றம் நடக்கும் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே