விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசின் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக வழங்கினார்.
விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது இந்த ஆண்டு, தமிழக தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரார் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
தேசிய விளையாட்டுத்துறை விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்தபடி வழங்கினார்.
9 வெவ்வேறு இடங்களிலிருந்தபடியே காணொலி வாயிலாக விருதுகளை விளையாட்டு வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், தமிழக வீரர் மாரியப்பன் பெங்களூருலிருந்தபடியே விருதினை பெற்றார். கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா வெளிநாட்டில் இருப்பதால் அவர் இன்று விருது பெறவில்லை.
அவருக்கு மற்றொரு நாளில் விருது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அர்ஜூனா விருது, துரோணாச்சாரியார் விருது உள்ளிட்ட விருதுகளும் இதே போல் காணொலி வாயிலாக வழங்கப்பட்டன.
கேல் ரத்னா விருது பெற்றவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், அர்ஜூனா விருது பெற்றவர்களுக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.