வேதா நிலையம் : சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடான வேதா நிலையத்தை கையகப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு, ஆளுநர் செயலாளர் உள்ளிட்டோர் 6 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமைக்கி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் சிறு வயதில் வளர்ந்தாகவும், பாட்டி சந்தியா மரணத்துக்கு பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தன் அத்தை ஜெயலலிதா பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா இறந்த பின்னர், தங்களை வாரிசுகளாக அறிவிக்க கோரி தானும், தன் சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, வேதா நிலையத்தை அரசுடமையாக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து, ஆளுநர் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் இயக்குனர், சட்ட துறை செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே