சுர்ஜித் பற்றி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
‘நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali
மேலும் மற்றொரு பதிவில் கூறும் போது ‘நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன் – வைரமுத்து
- தேசத்திற்கே அவமானம்!” – கருணாஸ்