கொரோனா 3ஆவது அலை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை அயனாவரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

எதிர்காலத்தில் 3வது அலை வந்தாலும் கூட எதிர்கொள்வதற்கு ஏற்கனவே இருக்கின்ற கொரோனா கட்டமைப்பை மேம்படுத்தி சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்த நிலையில் புதிய ஆக்சிஜன் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக ரோட்டரி சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, 3வது அலை குழந்தைகளை தாக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 250 படுக்கைகள் தயாராகி வருகின்றன.

தமிழகம் முழுவதிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளானாலும் அனைத்திலும் கூடுதல் படுக்கைகள் அமைத்து வைத்திருப்பது, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து வைத்திருப்பது, குழந்தைகளுக்கான வசதியை ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே