உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ரெய்னியில் உள்ள நந்தாதேவி பனிப்பாறை வெடித்ததாக தெரிகிறது. பனிப்பாறை வெடித்ததால் தாவ்லி கங்கை ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், அருகிலுள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் கரையோர வீடுகள்,மரங்கள், கால்நடைகள் அடித்து செல்லப்பட்டன.

இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஹரித்வார், ரிஷிகேஷிலும் நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். 

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மீட்பு பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசித்தார்.

முன்னதாக உத்தர்கண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தனது அலுவலகத்தில் உயராதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே