உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் தற்பொழுது வரை ஜோபிடன் 209 இடங்களிலும் டொனால்ட் டிரம்ப் 112 இடங்களிலும் பெற்றுள்ளனர் .அமெரிக்கா தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் தான் வெற்றி பெற முடியும் . கொரோனாவை கையாண்ட முறையில் டொனால்ட் டிரம்ப்பின் மீது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

இதுவரை 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இதன் வெளிப்பாடே டிரம்ப்க்கு சற்று பின்னடைவை தந்துள்ளது .

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலிருந்தே ஜோபிடன் முன்னிலையில் இருந்து வருகிறார் .

தற்பொழுதுவரை டிரம்ப்பை விட ஜோபிடன் 97 இடங்களில் முன்னிலை பெற்று ஏறக்குறைய வெற்றியின் விளிம்பை தொடப்போகிறார் .

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே