CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு..!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேர்வுகள் நடக்கும் என்ற தேர்வு அட்டவணை cbsc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி முதல் திறக்கப்பட்டு வருகின்றன.

இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாத காரணத்தால் பொதுத் தேர்வெழுதும் சிபிஎஸ்இ மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே