ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்சாமி கைது..!!

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் கைது செய்தனர்.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.

ஆனால் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே அர்னாப் மீது புகார் உள்ளது.

அன்வய் நாயக்கிற்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை என புகார் கூறப்படுகிறது.

விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட வழக்கை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் போலீஸ் மீண்டும் விசாரணையை தொடங்கியது.

மீண்டும் தூசு தட்டப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு அவரை அழைத்துச்செல்ல போலீசார் அர்னாப் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே மும்பை போலீசார் தன்னை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அர்னாப் புகார் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே