அமெரிக்க அதிபர் தேர்தல் – ஜார்ஜியா மாநில வாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் முன்னிலை..!!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இழுபறி நீடித்து வந்த ஜார்ஜியா மாகாணத்தில் அதிபர் டெனால்டு டிரம்ப்பை ஜோ பிடன் முந்தினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், அதிபருமான டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அலாஸ்கா, நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஜார்ஜியா மாகாணத்தில் இருவருக்கும் இடையே பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசமின்றி இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது ஜோ பிடன் டிரம்ப்பை முந்தியுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 அவை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டிரம்ப் 214 அவை வாக்குகளையும், பிடன் 264 அவை வாக்குகளையும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே