அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கூறிய மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப், தன் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார்.

படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தின.

இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி உலகின் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில், அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக சுதந்திரத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதையே இந்நாள் கொண்டாடப்படுவதாகவும் பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘நன்றி நண்பரே, இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது,’ என பதிவிட்டார்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே