இந்திய-சீன எல்லை பிரச்னையில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை – மத்திய அரசு

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் யோசனையை சீனா நிராகரித்துள்ளது.

மே 5ம் தேதி முதல் லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோக் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அதிக ராணுவ வீரர்களை குவித்து வந்தது.

இந்தியாவும் எல்லையில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.

அதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அதிபர் ட்ரம்ப், தற்போது இந்தியா சீனா இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளும் இணைந்து சுமூக நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை பதிலளித்தது.

மேலும் எல்லையையும், இறையாண்மையையும் இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் மத்தியஸ்த அறிவிப்பை சீனா நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக முதன்முறையாக கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்தியா மற்றும் சீனா இடையிலான ராணுவ நிலைப்பாடு தொடர்பான பிரச்னையை தீர்க்க மூன்றாம் தரப்பு தலையிடுவதை இரு நாடுகளும் விரும்பவில்லை என்று கூறினார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை சரியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் எங்களுக்கிடையேயான பிரச்சினைகளை முறையாக தீர்க்கும் திறன் எங்களிடமே உள்ளது என்றும்; மூன்றாம் தரப்பினரின் தலையீடு எங்களுக்கு தேவையில்லை என்றும் ஜாவோ லிஜியன் குறிப்பிட்டார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே