ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் இவர்தான்: விவிஎஸ் லட்சுமனன் புகழாரம்

ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் ,மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

2013ம் ஆண்டிலிருந்து மும்பை அணி தனது ராஜாங்கத்தை செலுத்தியது. அப்போதுதான் ரோகித் சர்மா அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2013, 2015, 2017, 2019 என ஒரு வருடம் விட்டு வருடம் அந்த அணிக்காக கோப்பையை வென்று ஐபிஎல் சிறந்த கேப்டன் என்னும் அளவிற்கு சென்றார்.

This image has an empty alt attribute; its file name is AVN_ROHIT.jpg



இந்நிலையில் இவ்வாறு சாதனை படைக்க ரோகித் சர்மா கொண்டிருந்த தலைமை பண்புகளைப் பற்றி பேசியுள்ளார் விவிஎஸ் லட்சுமணன். மேலும் ரோகித் சர்மாதான் ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த கேப்டன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

2007 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் தேர்வானார் ரோகித் சர்மா. அப்போதுதான் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு இளம் வீரராக வந்து சேர்ந்தார். அந்த வருடம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கினார். இருந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிந்தது.

அப்போதே அவர் தலைமை பண்பை வளர்த்துக் கொண்டிருந்தார். இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தனது கருத்தினை துணிச்சலாகவும் தெளிவாகவும் தெரிவிப்பது என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அதனையும் தாண்டி நெருக்கடியான நேரத்தில் எவ்வாறு அணியை மீட்டு எடுப்பதில் அவர் கில்லாடி.

This image has an empty alt attribute; its file name is 53c5e2f9919e479f57469fb6518658b1e9960c4d9df481b8e24f6f7ffaeb6f98.jpg



ஒவ்வொரு முறையும் நெருக்கடியான நேரத்தில் தனது சாமர்த்தியமான முடிவினால் அணியை வெற்றிபெற வைத்து சாதனை படைத்திருக்கிறார். இந்த பண்புகளை வருடா வருடம் அவர் மெருகேற்றிக் கொண்டே வந்தார். அதனால்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச் சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார் என்று கூறியுள்ளார் விவிஎஸ் லட்சுமணன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே