இனம், மொழி, சாதி, நிறம், எல்லைகள் பார்த்து கொரோனா தாக்காது என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என பிரதமர் நரேந்தி மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன், சகோதரத்துவ உணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவின் யோசனைகள் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்தியர்களுக்கு அத்தகைய திறமை உள்ளது என பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு சரியான பிறகு இந்தியா மருத்துவ துறையில் மிக முக்கிய இடம் பிடிக்கும் என்றும்; அதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.