தமிழகத்தில் 19ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் – தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..!!

நபிகள் நாயகத்திற்காகவும், அவருடைய போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு நாள் மிலாடி நபி. இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12வது நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார்.

நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயும் நபிகளின் 6 ஆம் அகவையில் காலமானார். பின்னர் முகமது அவர்களின் தாத்தா வளர்த்து வந்தார். அவரும் அடுத்த சில ஆண்டுகளில் காலமானதால் சிறிய தகப்பனார் முகமது நபியை அரவணைத்து வந்தார்.

சிறிய வயதிலேயே மக்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்குகின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையே மிலாடி நபி என்று கொண்டாடுகிறோம்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 19ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார். பிறை தென்பட்டதாக தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே