இளைஞர்கள் நடத்திவரும் உண்ணாவிரதத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார்

கேரள மாநிலம் வயநாட்டில் கர்நாடக அரசை கண்டித்து இளைஞர்கள் நடத்திவரும் உண்ணாவிரதத்தில் ராகுல்காந்தி பங்கேற்றுள்ளார்.

பந்திப்பூர் பகுதியில் காடு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 766-இல் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அல்லது மாற்று வழியை ஏற்படுத்தித் தர கூறியும் வயநாட்டில் இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வயநாடு சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அந்த தொகுதியின் எம்பியுமான ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே