குடியுரிமை சட்டம் குறித்து பீதி கிளப்புகிறார்கள் : ராஜேந்திர பாலாஜி

உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட ஸ்டாலின் சதி செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மக்களிடம் பீதியை கிளப்பி விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி சதித் திட்டம் தீட்டுகிறார்கள் என்கிற தகவல், தனக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே