சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்ட ஹாரர் படங்களில் ஒன்றான ‘அரண்மனை’ வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதன்பின் தொடர்ந்து அதன் இராண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமான ‘அரண்மனை 3’ தயாராகி விட்டதால் இப்படம் வரும் அக்டோபர்-14 அன்று திரையில் வெளியாகும் என ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ அறிவித்திருக்கிறது.

இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா.சி இசையமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே