தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
மாணவர்களும் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.
இதற்கிடையில் ஒரு சில பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 46 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து சக மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.