சென்னை கால்நடை மருத்துவ மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா..!!

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநில சுகாதாரத்துறை புள்ளி விவரத்தின் படி,தமிழகத்தில் கடந்த 26 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்படி,தமிழகத்தில் நேற்று கோவை நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக,கேரளாவில் இருந்து வந்த நான்கு மாணவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவியது என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதி மாணவர்கள் 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில்,அவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வேப்பேரியில் உள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே