அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூலை மாதம் ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அமைச்சருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், “கரோனா பாதிப்பு சீராகி இயல்பு நிலை திரும்பும்போது 10- ஆம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டும்.

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் கூறினார். கல்வி முக்கியம்தான், அதைப்போல உயிரும் முக்கியம்” என்றார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 525 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: