மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது ‘AMPHAN’

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த சூப்பர் புயல் என்று அழைக்கப்பட்ட AMPHAN புயலானது மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.

AMPHAN புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. அதன் மேகங்கள் கடல் பகுதியில் இருந்து கரைப்பகுதியைக் கடப்பது மேற்கு வங்கப் பகுதிக்கு அருகே நிகழ்கிறது.

இந்த புயல் சின்னமானது முற்றிலும் கரையைக் கடந்து முடிக்க சுமார் 4 மணி நேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் பகுதியில் காற்றானது மணிக்கு 160 – 170 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. அதிகபட்சமாக இது 190 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதீப், புவனேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே