OBC இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்; சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

அதேபோல் 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற குழு அமைக்க வேண்டும். இதற்காக உடனே மூன்று நபர் கமிட்டி அமைத்து முடிவு எடுக்க வேண்டும்.

இதற்கு சட்ட ரீதியாக எந்த விதமான தடையும் இல்லை என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.

சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை தமிழக கட்சிகள் வரிசையாக பாராட்டி வருகிறது. திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டி வருகிறது.

இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் இன்று (ஜூலை 27) தன் ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்களின் உரிமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்தே, தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, OBC இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த அழுத்தம் தர வேண்டும்.

சமூகநீதி காத்திட தாமதமோ,மேல்முறையீடோ இன்றி இட ஒதுக்கீட்டை இவ்வாண்டே செயல்படுத்த வேண்டும்  எனப் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே