ஸ்டாலினையே வயதானவர் என்று சொல்கிறார் உதயநிதி : ராதாரவி

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்துப்படி மு க ஸ்டாலின், ரஜினி, கமல் அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் ராயப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வயதானவர்கள் எல்லாம் வீட்டில் இருக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்டாலின், ரஜினி, கமல், விஜயகாந்த் அனைவருமே ஒரே வயதுடையவர்கள் என்பதால் மு க ஸ்டாலினையே உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார் என ராதாரவி கூறினார்.

மேலும், இரண்டாவது வரிசையில் அமர வைத்துவிடுவோம் என்ற ஐயத்தாலையே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருக்கலாம் என்றும் ராதாரவி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே