குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அகதிகள் இலங்கை செல்லவே விரும்புவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த உண்மை நிலையை அறியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் போராடுவதாக குற்றம் சாட்டினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு மறைமுகமாக கொண்டு வரவில்லை என குறிப்பிட்ட இல.கணேசன் பாஜக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டினார்.
குடியுரிமை திருத்தச்சட்டத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும்; பகுத்தறிவோடு சிந்திப்பவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்து கொள்வார்கள் எனவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் உள்ள அகதிகள் இலங்கை செல்லவே விரும்புவதாக குறிப்பிட்ட இல.கணேசன் இந்தியாவில் இருக்க விரும்புவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.