ட்விட்டரில் தமிழ் மொழியில் பதிவிட்டு பிரதமர் மோடி பெருமிதம்

தமிழக மக்களின் அன்பும், உபசரிப்பும் தனித்துவம் மிக்கதாக இருந்தது என டுவிட்டரில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

எப்போதும் போல் தமிழக மக்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆற்றல்மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே