அலாஸ்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல்; 7 பேர் பலி

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அம்மாகாண சட்டமன்ற உறுப்பினர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திற்கு, தெற்கு கரோலினாவில் இருந்து 4 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது விமானம் கெனாய் தீபகற்பத்தின் நகரமான சோல்டோட்னாவில் உள்ள விமான நிலையப்பகுதிக்கு வந்தபோது, மறுபுறம் அலாஸ்கா சட்ட மன்ற உறுப்பினர் கேரி நாப் சென்ற மற்றொரு விமானம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் கேரி நாப் உட்பட 2 விமானங்களில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் விபத்துக்குள்ளான விமானங்களில் பாகங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விழுந்துள்ளதாகவும்; இந்த விபத்து குறித்து FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விபத்தில் உயிரிழந்த அலாஸ்கா மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அம்மாகாண சபாநாயகர் பிரைஸ் எட்க்மன், கேரி நாப் விபத்தில் உயிரிழந்ததை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன் “கேரி ஒரு வகையான தலைவராகவும், உண்மையான அலாஸ்கா குடிமகனாகவும் இருந்தார்.

அவர் சட்டமன்றத்தில் தனது மாவட்டத்திற்காக அயராது உழைத்தார். என பதிவிட்டுள்ளார்.

அலாஸ்காவில் விமான விபத்துகள் ஏற்படுவது புதிதல்ல, கடந்த ஆண்டு மே மாதம் கெட்சிகனில், கப்பல் பயணிகளை ஏற்றிச் சென்ற 2 விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே