பெரியார் குறித்து ரஜினி பேசியது சரிதான் – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பெரியார் குறித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் நியாயமானதுதான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராஜேந்திர பாலாஜியை அவரது இல்லத்தில் சிக்கிம் கால்நடை பராமரிப்பு மற்றும் வேளாண் அமைச்சர் லோக் நாத் சர்மா சந்தித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, சிக்கிமில் பால் பதப்படுத்தும் பண்ணை அமைப்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறினார்.

முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கும் திமுக இந்துக்களுக்கு பிரச்னை வரும்போது குரல் கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டிய அவர், பெரியார் விவகாரத்தில் ரஜினிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, அமைச்சர் ஜெயக்குமாரோ கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே