நவ.14 இரவு 7.30 – 8.30 வரை 1 மணி நேரம் செல்போன்களை அணைத்து வையுங்கள் – பள்ளிக்கல்வித்துறை

வரும் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்று இரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணிவரை பெற்றோர்கள் தங்கள் கைபேசிகளை கண்ணுறங்க வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கைபேசிகளை கண்ணுறங்க வைக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் தத்தமது குழந்தைகளுடன் பெற்றோர் செலவழிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கைப்பேசிகளை கண்ணுறங்க வைப்பது குறித்து பெற்றோருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள் என்ற பெயரிலான பரப்புரை இயக்கம் மூலம் மின்னணு சாதனங்களில் ஒதுக்கி வைத்தால் தமது பிள்ளைகள் மேல் நேரடி கவனம் செலுத்தும் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே