தமிழக தொல்லியல் துறைக்கு பாராட்டு : அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தை மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடியில் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொழில்துறை சிறப்பான முறையில் செய்திருப்பதாக தெரிவித்தார்.

தமிழர் நாகரிகம் 2500 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறிய ராமகிருஷ்ணன், ஆறாம் கட்ட பணியில் மாநில அரசுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என குறிப்பிட்டார்.

இதேபோல் கீழடியில் நடைபெற்று வரும் பணிகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வைத்தியநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து கீழடியில் கிடைக்கப்பெற்ற ஓடுகள், பானைகள் உள்ளிட்ட விவரங்களை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே