‘தமிழின படுகொலைக்கு உதவியது காங்கிரஸ்’: சீமான்

இலங்கையில் தமிழினத்தை அழிக்க அந்நாட்டிற்கு 80 ஆயிரம் கோடியை வட்டியில்லா கடனாக அள்ளிக் கொடுத்தது காங்கிரஸ் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜநாராயணனை ஆதரித்து சீவலப்பேரி, பாளையஞ்செட்டிகுளம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாளையஞ்செட்டிகுளத்தில் பேசியவர், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யும் அளவிற்கு இலங்கை அரசுக்கு திமிரை கொடுத்தது காங்கிரஸ் செய்த உதவிதான் என குற்றம்சாட்டினார்.

அந்த காங்கிரஸ்-க்கு உதவியது திமுக என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே