சென்னையில் தனியார் ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இன்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உள்ளது.

தமிழக பாதிப்பு நிலவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் அல்லது மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ஆகியவர்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தனியார் ஊடகம் ஒன்றின் மருத்துவப் பிரிவு செய்தியாளராகப் பணியாற்றிய செய்தியாளர் ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் அனைவருக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், எந்த விடுப்பும் இல்லாமல் இயங்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினரைப் போலவே செய்தியாளர்களும் பணிபுரிகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களின், செய்தியாளர்களின் பணி அமைப்பும் அதுவே.

உணவுக்கு வழி கிடைக்காமல் எளிய மக்கள், உதவிகளை எதிர்பார்த்து பசியுடன் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான மனித உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், ஊரடங்கு காலத்தை வீட்டுக்குள் இருந்து பாதுகாப்பு பெறுமாறு அரசும், சேவைப்பணியில் இருப்பவர்களும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே