உருமாற்றம் அடைந்த கொரோனா..; அச்சம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வீரப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “லண்டனிருந்து வந்தவர்களின் மாதிரிகள் ஆய்வில் உள்ளது.

அவரோடு பயணித்த 37 பேரில் 33 பேருக்கு நோய் தொற்று இல்லை, கடந்த சில தினங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு இங்கிலாந்திலிருந்து வந்த சுமார் 2,800 பேர் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் உள்ளனர். 

லண்டனில் இருந்து தமிழகம் திரும்பியவரின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை என 3 அடுக்கு வளையத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா முழு கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் புது வகையான வைரசை நினைத்து தேவையற்ற பதட்டமோ, பயமோ கொள்ள வேண்டாம்.

நீலகிரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் முழுமையாக மருத்துவர்களால் கண்காணிக்கபடுவர்” எனக் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே