சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

தமிழகத்தில் நாளை 144 உத்தரவு அமலுக்குவருவதால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு படையெடுத்த மக்கள் கூட்டம்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும், நாளை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது போக்குவரத்து மற்றும் உணவகங்கள் செயல்படாது என்பதால், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் ரயில் ரத்து செய்யப்பட்டதால் பேருந்துநிலையங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் நெரிசலுடன் காணப்பட்டது.

குறைவான அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவதால், இடம் பிடிப்பதில் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், நாளை மாலை வரை பேருந்து இயங்கும் என்றும், மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்துகள் பற்றாகுறையை சாமளிக்க சென்னை மாநகரப் பேருந்துகளை தொலை தூரங்களுக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள், வெப்ப பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

அதோடு சென்னையை விட்டு வெளியேறும் இடங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே