அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக தடை – உச்சநீதிமன்றம்

சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ள உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே