லக்‌ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

அபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்தித்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெபாசிட் செய்த தங்களது பணம் கிடைக்குமா? என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்வாக அதிகாரி டி.என். மனோகரன், டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. டெபாசிட் செய்தவர்கள் அச்சப்பட வேண்டாம்.

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே