பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் வரும் 11, 12 மற்றும் 13 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர்.
அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர்.
இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
அதே நேரம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வரவேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.