ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை ஆர்த்தி அருண் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

காமன்வெல்த் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனை ஆர்த்தி அருண் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 72 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட, சென்னையை சேர்ந்த ஆர்த்தி அருண் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

இதேபோல ஆசிய பளுதூக்குதல் போட்டியிலும் தங்கம் வென்றார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை, ஆர்த்தி அருண் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே