குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தென்காசியில் கன மழை எதிரொலியாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.

இதனால் விடுமுறை தினமான இன்று ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் ஆவலுடன் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகளும், கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி மெயின் அருவியில் புனித நீராட குவிந்த ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அதேவேளையில் பழையகுற்றாலம், புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டுவதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே