JUST NOW : தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 19ஆம் தேதி கூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கக் கூடிய நிலையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில்  நாளை மறுநாள் நவம்பர் 19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பபடவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே