2019ம் ஆண்டு இந்தியர்களால் கூகுளில் தேடப்பட்ட டாப் 5

2019ம் ஆண்டு இந்தியர்களால் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகள், பிரபலங்கள், திரைப்படங்கள் போன்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கூகுளில் அதிகளவு தேடப்பட்ட நிகழ்வுகளில் இந்த ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் முதலிடம் பிடித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை, கிரிக்கெட் தொடர்பான பேட்டிகள், அறிவிப்புகள், அணிகளின் ஸ்கோர்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகளவு ஆர்வம் காட்டியுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் 2-ம்இடத்தை பிடித்திருக்கிறது.

தேர்தல் தேதி, பிரச்சாரம், கூட்டணி தொடர்பான விஷயங்களை தெரிந்து கொள்ள இந்தியர்கள் அதிகளவு ஆர்வம் காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.  

நிலவின் தெற்குப் பகுதியை ஆராய உலகிலேயே முதன்முறையாக நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 பற்றி இந்தியர்கள் அதிகளவு தேடி  உள்ளனர். எனவே இது 3ம் இடத்திலும்;

அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி பதிப்பான கபீர் சிங் 4-ம் இடத்தையும்;

உலகளவில் வசூல் சாதனை புரிந்த அவெஞ்சர் எண்டு கேம் 5-ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.

இந்தியர்கள் கூகுளிடம்  அதிகம் கேட்ட கேள்விகள் பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில் காஷ்மீர் மீதான சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை அடுத்து, 370 என்றால் என்ன?? என்ற கேள்வியை இந்தியர்கள் அதிகளவு தேடியுள்ளனர்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு என்றால் என்ன? என்ற கேள்வி 2வது இடத்திலும்;

கருந்துளை என்றால் என்ன?? என்ற கேள்வி 3வது இடத்திலும்;

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் மோடி உரையாற்றிய நிகழ்வான, ஹவுடி மோடி என்றால் என்ன? என்ற கேள்வி 4வது இடத்திலும்;

சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட் என்றால் என்ன? என்ற கேள்வி 5-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

செய்திகள், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைப் பிரபலங்களையும் கூகுளில் தேடுகின்றனர் இந்தியர்கள்.

அந்தப்பட்டியலில், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் வர்தமானை அதிகளவு மக்கள் தேடியுள்ளதால், இந்தப்பட்டியலில் அவர் முதலிடம் பிடித்திருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் 2வது இடத்திலும்,  

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 3ம் இடத்திலும் இருக்கின்றனர்.

பீகாரைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆனந்த் குமார் 4வது இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாற்று படம் பாலிவுட்டில் சூப்பர் 30 என்ற பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Uri: The Surgical Strike திரைப்படத்தில் இந்திய ராணுவத்தின் மேஜர் விஹான் சிங் ஷெர்க் வேடத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற விக்கி கவுஷல் 5-ம் இடத்தை பிடித்திருக்கிறார். 

சினிமா ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பல படங்களையும் தேடியிருக்கின்றனர்.

  • அதில் பாலிவுட் படமான கபிர் சிங் முதலிடத்திலும்,
  • ஹாலிவுட் படங்களான அவெஞ்சர் எண்டு கேம்  2ம் இடத்தையும்,
  • ஜோக்கர் 3ம் இடத்தையும்,
  • கேப்டன் மார்வெல் 4-ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன.
  • பாலிவுட் படமான சூப்பர் 30, 5-ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே